'விடுதலை 2' படம் குறித்து வெளியான அதிர்ச்சிகரமான தகவல்





வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'விடுதலை 2' படத்திற்காக பல மாதங்களாகவே ரசிகர்கள் வெறித்தனமாக காத்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு ஒருப்பக்கம் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் 'விடுதலை 2' படத்தின் ரிலீஸ் இன்னும் சில மாதங்கள் தள்ளிப்போகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


'விடுதலை 2' வில் புதிதாக சில கதாபாத்திரங்களை கொண்டு வந்து படத்தினை இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.




கோலிவுட் சினிமாவில் இந்தாண்டு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் படமாக வெற்றிமாறனின் 'விடுதலை 2' படம் உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். கடந்த சில மாதங்களாகவே இப்படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் 'விடுதலை' இரண்டாம் பாக ரிலீஸ் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


தமிழ் சினிமாவில் தனி ரசிகர்கள் பட்டாளம் கொண்ட இயக்குனர்களில் வெற்றிமாறனும் ஒருவர். தனது பெயருக்கு ஏற்றபடி இதுவரை தோல்வி எதுவும் கொடுக்காமல் தொடர் வெற்றிகளை கொடுத்து வருகிறார். கடைசியாக சூரியை கதாநாயகனாக்கி இவர் இயக்கி வெளியான 'விடுதலை' படம் சமூகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


இதனையடுத்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை மும்முரமாக இயக்கி வருகிறார். கடந்த சில மாதங்களாகவே 'விடுதலை 2' ஷுட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. அதிகார வர்க்கம் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்தும் வன்முறை வெறியாட்டத்தை உண்மைக்கு நெருக்கமாக இப்படத்தில் படமாக்கி கொண்டிருக்கிறார் வெற்றிமாறன். இப்படத்தின் ஷுட்டிங் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாகவும், விரைவில் படம் ரிலீஸ் ஆகும் என்றும் தகவல்கள் வெளியாகின.


இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவலின்படி 'விடுதலை 2' படத்தில் மஞ்சு வாரியர், கென் கருணாஸ் உள்ளிட்டோர் புதிய கதாபாத்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளனராம். இதில் விஜய் சேதுபதி ஜோடியாக மஞ்சு வாரியர் நடிப்பதாக கூறப்படுகிறது. இவர்களுக்கான தனிப்பட்ட கதையும் வெற்றிமாறன் எழுதியுள்ளாராம்.


இதனால் 'விடுதலை 2' படப்பிடிப்பு மேலும் தாமதமாகும் என கூறப்படுகிறது. இன்னமும் 5 மாதம் வரை படத்தின் வேலைகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே 'விடுதலை 2' படம் இப்போதைக்கு ரிலீஸ் ஆகாது என்பது உறுதியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் இடையில் கடும் அப்செட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வெற்றிமாறன் அடுத்ததாக இயக்கும் 'வாடிவாசல்' படத்தின் நிலையம் கேள்விக்குறியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section