இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் சேவையாற்றி உயிரிழந்த பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்களை நினைவு கூறும் முகமாக தேசிய பொலிஸ் வீரர்கள் தினம் இன்று நாடளாவிய ரீதியில் இன்று நினைவுகூரப்படுகிறது.
1864 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட சபான் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதன் பின்னர் பொலீஸ் வீரர்களை ஞாபகப்படுத்தி அவர்களுக்கு கௌரவம் வழங்கும் முகமாகவே இத் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.