இலங்கை மகளிர் அணிக்கு எதிரான டி20 போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் 16 வயது விக்கெட் காப்பாளர், துடுப்பாட்ட வீராங்கனை சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான உள்நாட்டு டி20 போட்டிகளுக்கான 15 பேர் கொண்ட அணியை கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது.
இந்தநிலையில் மார்ச் 27 இல் ஆரம்பமாகவுள்ள இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20ஐ தொடருக்கான தென்னாப்பிரிக்காவின் அணியில் கராபோ மெசோ தனது முதல் சர்வதேச போட்டி அழைப்பைப் பெற்றுள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் 2023இல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக்கிண்ணப்போட்டிகளில் அவர் பங்கேற்றார்.
இதன்போது அவர் விளையாடியபோட்டிகளில் எட்டு ஆட்டமிழக்கங்களைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.