ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சில வழிமுறைகள்
சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது அவசியம். அதற்கான சில வழிமுறைகளை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
உலக சிறுநீரக தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 9 அன்று அனுசரிக்கப்படும் வருடாந்திர உலகளாவிய நிகழ்வாகும். நமது சிறுநீரகத்தின் முக்கியத்துவம் மற்றும் அவற்றை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்திருப்பது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாள் இது.
சிறுநீரகங்கள் நம் உடலில் உள்ள முக்கிய உறுப்புகளாகும், அவை ரத்தத்திலிருந்து கழிவுகள் மற்றும் அதிகப்படியான திரவங்களை வடிகட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், ரத்த சிவப்பணு உற்பத்தியைத் தூண்டும் ஹார்மோன்களை உற்பத்தி செய்யவும், எலக்ட்ரோலைட் சமநிலையைப் பராமரிக்கவும் உதவுகின்றன. இருப்பினும், சிறுநீரக நோய் ஒரு அமைதியான கொலையாளி. சிறுநீரக நோய் பெரிய பாதிப்பை எட்டும் வரை பெரும்பாலும் வெளியில் தெரிவதில்லை.
உலக சிறுநீரக தின அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் 10-ல் ஒருவருக்கு சிறுநீரக நோய் உள்ளது. மேலும் சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளால் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். சிறுநீரக நோய்க்கான மிகவும் பொதுவான காரணங்கள் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகும்.

நமது சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பது அவசியம். அதற்கான சில குறிப்புகள்:
1) நிறையத் தண்ணீர் குடிப்பது உடலிலிருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. மேலும் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்கிறது.
2) பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் உப்பு மற்றும் சர்க்கரை குறைவாக உள்ள உணவுகள் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் நீரிழிவு நோயைத் தடுத்து சிறுநீரகத்தை பாதுகாக்கிறது.
3) வழக்கமான உடற்பயிற்சி எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், மன அழுத்தத்தைக் குறைக்கிறது. அத்துடன் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
4) புகைபிடித்தல் சிறுநீரக நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதைக் கடினமாக்குகிறது. இது நேரடியாக சிறுநீரக நோய்க்கு வழிவகை செய்கிறது.
5) உங்களுக்கு நீரிழிவு நோய் அல்லது உயர் ரத்த அழுத்தம் இருந்தால், சிறுநீரகப் பாதிப்பை தடுக்க அவற்றைக் கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம்.எனவே வழக்கமான சிறுநீரக செயல்பாட்டுப் பரிசோதனைகளை செய்துகொள்வதன் மூலம் சிறுநீரக நோயை முன்கூட்டியே கண்டறிய உதவுகிறது.