பெண் வைத்தியர்துஷ்பிரயோகம் ஆண் வைத்தியர் கைது!

0

 


மாவனெல்லை- அரநாயக்கமாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் 28 வயதுடைய பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையின் வைத்தியர்ஒருவர் நேற்று வியாழக்கிழமை (8) கைது செய்யப்பட்டதாக அரநாயக்க பொலிஸார்தெரிவித்துள்ளனர்.


அரநாயக்க மாவட்டவைத்தியசாலையில் கடமையாற்றும் 45 வயதுடைய திருமணமான வைத்தியர்ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார்குறிப்பிட்டுள்ளனர்.


இது தொடர்பில், பெண் வைத்தியரின் தந்தையளித்த முறைப்பாட்டின்பிரகாரம், ஆண் வைத்தியர்கைது செய்யப்பட்டுள்ளார். 


குறித்த பெண் வைத்தியர்வேறு வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் பெற்று கடந்த 5 ஆம் திகதி அரநாயக்கமாவட்ட வைத்தியசாலைக்கு பணிக்காக வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


துஷ்பிரயோகத்திற்குள்ளான வைத்தியர் மற்றும் அப்போது கடமையிலிருந்த 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவத்திற்கு முகம் கொடுத்த பெண் வைத்தியர்,

கேகாலை போதனா வைத்தியசாலையின் சட்டவைத்தியரிடம் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார்கு றிப்பிட்டுள்ளனர்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top