கற்பூரவல்லி மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு இயற்கையான செடி. இலைகள் மிகவும் மென்மையாக பச்சை நிறத்தில் இருக்கும். காரத்தன்மையுடன் நீர்ச்சத்து கொண்டது.
இதனை பச்சையாகவே சாப்பிடுவது நல்லது என்றாலும் சிலருக்கு காரத்தன்மை ஒப்புக்கொள்வது தேநீரில் போட்டு அருந்தலாம் அல்லது கஷாயம் செய்து குடிக்கலாம்.
கிராமங்களில்கூட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மார்புச்சளி, இருமல் மற்றும் காய்ச்சல் வரும்போது இதனைப் பயன்படுத்துவர்.
♦ சளி மற்றும் இருமலைப் போக்க பெரிதும் உதவுகிறது.
♦ நுரையீரல் தொடர்பான பிரச்னைகளுக்கும் ஆஸ்துமாவுக்கும் இயற்கையான சிகிச்சைப் பொருளாக பயன்படுகிறது.
♦ செரிமானத்திற்கு உதவுகிறது. சிலர் உணவுகளில் கூட பயன்படுத்துகின்றனர்.
♦ எந்தவொரு சூழ்நிலையிலும் எளிதாக வளரக்கூடிய தாவரம் என்பதால் வீட்டில் வளர்க்கலாம். குறிப்பாக மழைக்காலங்களில் வேகமாக படர்ந்து வளரும்.
♦ விஷக் கிருமிகளை முறிக்கும் தன்மை கொண்டதாலேயே முன்னோர்கள் வீட்டில் முன் துளசி, கற்பூரவல்லி செடியை வளர்ப்பதுண்டு.
கற்பூரவல்லி இலைகளை காயவைத்துப் பொடி செய்தும் பயன்படுத்தலாம்.
♦ கற்பூரவல்லியில் சோடியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, கால்சியம்,
வைட்டமின் சி, இரும்புச்சத்து, வைட்டமின் பி6, மெக்னீசியம் ஆகிய சத்துகள் இருக்கின்றன.