அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ளுங்கள்: கஜேந்திரகுமாருக்கு டக்ளஸ் அழைப்பு

Dsa
0

 


உங்கள் பாட்டனாரை போன்று நீங்களும் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ளுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.


யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் கஜேந்திரகுமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



மேலும், இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் தொடர்ந்து இடம்பெறுகிறது என்றும் தடுப்பதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.


இதன்போது கருத்து தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா,


'' நான் பலமுறை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழ்நாடு சென்று தமிழக தலைவர்களுடன் கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் பேசுவோம் என அழைப்பு விடுத்தேன். சிலர் அதனை மறுக்கின்றனர்.'' என்றார்


இதன் போது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார், ''நீங்கள் துறைசார்ந்த அமைச்சராக இருக்கிறீர்கள். உங்களால் பிரச்சினை தீர்க்க முடியாது என்றால் எங்களை ஏன் அழைக்கிறார்கள். உங்களால் கையாள முடியாது என்றால் ஏன் அமைச்சராக இருக்கிறீர்கள் பதவியை துறவுங்கள்'' என்றார்.


இதன் போது பதில் அளித்த டக்ளஸ் , ''இந்த பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல இந்தப் பிரச்சினையை ஒருவர் கையாள முடியாது. இராஜதந்திர ரீதியில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து கையாள வேண்டும்.


நான் பதவி விலகுவதால் குறித்த பிரச்சினை தீரப்போவதக எனக்கு தெரியவில்லை. உங்கள் பாட்டனர் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவியை ஏற்றது போன்று நீங்களும் ஏற்றால் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியும் என நினைக்கிறேன்.'' என்றார்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top