இலங்கைக்கு திரவமாக்கப்பட்ட எல்.என்.ஜி என்ற இயற்கை எரிவாயுவை வழங்க இந்தியா முன்மொழிந்துள்ளது.
மின்சாரம் உற்பத்தி
இலங்கையின் யுகதனவி மற்றும் சோபாதபாவி மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய குறித்த முன்மொழிவு உதவும் என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எல்.என்.ஜியில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான செயல்முறையை விரைவுபடுத்தும் முயற்சியில், இந்திய அரசு பெட்ரோநெட் எல்என்ஜியில் இருந்து இந்த இடைக்கால தீர்வை முன்மொழிந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.