சுங்க அதிகாரிகள் சட்டப்படி வேலை சுங்க அதிகாரிகள் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
தமது சிக்கல்களுக்கு தீர்வு வழங்கப்படும் வரை தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என சுங்க அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அமில சஞ்ஜீவ தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு பிரதானமான வருமானத்தை ஈட்டித்தரும் நிறுவனமாக சுங்கத் திணைக்களம் காணப்பட்ட போதிலும், தற்போது கடுமையான ஊழியர் பற்றாக்குறை நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.