யாழ்பாணத்தில் அறுவடை செய்த மரக்கறிகள் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு வந்ததையடுத்து வேகமாக அதிகரித்த அனைத்து வகையான மரக்கறிகளின் விலைகளும் 65 தொடக்கம் 70 வீதம் வரை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பிரதேசத்தில் கேரட், பெரிய மிளகாய் மற்றும் பீட்ரூட் வகைகள் வெற்றிகரமாக பயிரிடப்பட்டுள்ள நிலையில், ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை மொத்த விலையில் விற்கப்பட்ட ஒரு கிலோ கேரட் விலை இன்று காலை நிலவரப்படி, 500 முதல் 600 ரூபாய் வரை குறைந்துள்ளது.