இலங்கையின் 76வது சுதந்திர தின விழா அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் விமரிசையாக கொண்டாடப்பட்டது




அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில்  சுதந்திர தின நிகழ்வுகள் வைத்திய அத்தியட்சகர் டாக்டர். ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர்.றஜாப் தலைமையில் சுகாதார மேம்பாட்டுக்கான திறந்த கேட்போர் கூடமான (கிரவுன் காடனில்)  இன்று(04) நடைபெற்றது. 


இதன்போது  ராணுவ வீரர்கள் உள்ளிட்ட நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த அனைவரையும் நினைவுகூர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் "புதிய தேசம் அமைப்போம்"  எனும் தொனிப்பொருளில் தேசிய சுதந்திரத்தின் முக்கியத்துவத்தினை பிரதிபலிக்கும் வகையில் வைத்திய அத்தியட்சகரினால் விசேஷட உரை நிகழ்த்தப்பட்டதும் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் மர நடுகை நிகழ்வும் இடம்பெற்றது.


இந் நிகழ்வில், வைத்தியசாலை நிபுணர்கள், வைத்தியர்கள், வைத்தியசாலை குழு உறுப்பினர்கள், அனைத்து தர  சுகாதார சேவை உத்தியோகத்தர்கள்,  சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.






Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section