மருத்துவமனையில் எலிகளால் 3 மருத்துவர்கள் பணிநீக்கம்!

0

 


இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், காமெடி ரெட்டி பாடசாலையில அரச மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் ஷேக் முஜீப் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக அங்குள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஷேக் முஜிப் தூங்கிக் கொண்டிருந்த போது அவரது கை, கால் விரல்களை எலிகள் கடித்து குதறியது.

இதுகுறித்து ஷேக் முஜிபின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.

மருத்துவமனையில் எங்கு பார்த்தாலும் எலிகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தோம். அவர்களின் அலட்சியத்தால் தான் ஷேக் முஜிப்பை எலிகள் கடித்ததாக தெரிவித்தனர்.

சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மருத்துவக் கல்லூரி இயக்குனர் திரிவேணி மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த மருத்துவர் காவியா, பொது மருத்துவ அலுவலர் மருத்துவர் வசந்தகுமார் மற்றும் தாதியர் மஞ்சுளா ஆகியோரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும் எலிகளைப் பிடிக்க மருத்துவமனையில் ஆங்காங்கே கூண்டுகள் வைக்கப்படும். மருத்துவமனை வளாகம் முழுவதும் தூய்மையாக வைத்துக் கொள்ள பணியாளர்களுக்கு உத்தரவிட்டனர்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top