பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் லீட் கதாபாத்திரத்தில் நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் திரைப்படம் கல்கி 2898 AD. இந்த திரைப்படத்தை இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கியிருக்கிறார். ப்ரீ ரிலீஸ் பிசினஸில் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் மட்டுமே கிட்டதட்ட 75 கோடி வசூலித்த இந்த திரைப்படத்தின் ரிலீசுக்கு பிந்தைய வசூலை நினைத்தால் கிறுகிறிக்கிறது...
தெலுங்கு மற்றும் ஹிந்தியில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ப்ராஜெக்ட் K என அறிவிக்கப்பட்டு கடந்த 2020ல் இந்த படம் துவங்கப்பட்டது. இந்த திரைப்படத்தின் பட்ஜெட் மட்டுமே 600 கோடியாகும். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
கல்கி 2898 AD திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைப்பாடுகள் நடந்துவருகிறது. இந்த திரைப்படம் இந்த ஆண்டு மே ஒன்பதாம் தேதி ரிலீசாகிறது. தற்போது இந்த படத்தின் ப்ரீ பிசினஸ் வேலைகள் நடந்துவருகிறது. கல்கி படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் நிஜாம் என்கிற ஒரு வட்டாரத்தில் மட்டுமே பல கோடியாக வந்துள்ளதாம்.
தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் நிஜாம் நகரில் மட்டுமே கிட்டதட்ட 75 கோடி வசூலித்து இருக்கிறது கல்கி. அது போக ஆந்திர பிரதேஷ் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மட்டுமே 200 கோடியை இந்த படம் வசூலிக்கும் என்கிறது தயாரிப்பு நிறுவனம். பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸின் ஆதி புருஷ் மற்றும் ராதே ஷாம் படங்கள் பெரிய வரவேற்பு தரவில்லை.
எனினும் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் திரைப்படம் பெரிய ஹிட் படமாக அமைந்தது. அதனை விட கண்டிப்பாக கல்கி படத்தின் வரவும் மற்றும் விமர்சனம் அதிகமாக இருக்கும் என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.
பிரபாஸ், தீபிகா படுகோன் மட்டுமன்றி அமிதாப் பச்சன், உலகநாயகன் கமல்ஹாசன் உள்ளிட்டோரின் இருப்பு இந்த படத்திற்கான மதிப்பை அதிகமாகியுள்ளது. அந்த வகையில் கண்டிப்பாக கல்கி 2898 AD ரிலீசுக்கு பிறகு இந்த படத்தின் வசூல் அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.