18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

 


2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுப் பணியை தாமதமின்றி நிறைவு செய்யுமாறு தேர்தல் ஆணையர் அலுவலகம் நினைவூட்டல் விடுத்துள்ளது.

பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பான பதிவுப் பணிகளை நிறைவு செய்ய வேண்டுமென ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

18 வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் அல்லது வீட்டில் இருப்பவர்களின் விபரங்கள் அவர்களது வீடுகளில் பெறப்படும் வாக்காளர் பட்டியலில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


அதற்கமைய, நிரந்தர வதிவிடத்தை மாற்றாதவர்கள், திருமணம், கல்வி அல்லது வேறு காரணங்களுக்காக வசிப்பிடத்தை மாற்றியவர்கள் அனைவரும் வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section