மன்னார் - தலை மன்னார் பகுதியில் 10 வயதான சிறுமி ஒருவர் நேற்றைய தினம் (15:02:2024) இரவு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!!
கொலை நடந்த பகுதியில் தோட்டம் ஒன்றை பராமரிப்பதற்காக பணிக்கமர்த்தப்பட்ட நபர் ஒருவராலேயே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது!!
குறித்த சந்தேக நபர் மற்றும் அவரது மனைவி தலைமன்னார் பகுதியில் வசித்து வந்த நிலையில் கணவன் போதைக்கு அடிமையானதால் மனைவி பிரிந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது!!
இந்த நிலையில் அருகில் இருக்கும் தாய் ஒருவர் குறித்த சந்தேக நபருக்கு மனிதாபிமான அடிப்படையில் உணவு முதலிய உதவிகளை வழங்கி வந்த நிலையில் அவர்களுடன் நட்பாக பழகி வந்துள்ளார்!!
இந்த நிலையில் சந்தேக நபர் நேற்றைய தினம் மாலை (15:02:2024) உணவு வழங்கும் தாயின் பேத்தியான குறித்த சிறுமியை கடைக்கு அழைத்து சென்ற நிலையில் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்ப்டுகின்றது!!!
சிறுமியை காணாத நிலையில் அருகில் இருந்த CCTV கெமராக்களின் உதவியுடனும் ஊர் மக்களின் உதவியுடனும் மேற்கோண்ட தேடுதலின் போதே சிறுமியின் சடலம் இன்று (16:02:2024) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்!
குறித்த சம்பம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்!!