சாரதிகள் விதிமுறைகளை கடைப்பிடிக்காததே அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களுக்கு முக்கிய காரணம் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலையில் விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அடுத்த வாரம் முதல் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு வரையிலான நெடுஞ்சாலைப் பகுதியில் மின்சார விளக்குகளை பொருத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிடுகின்றார்.