'கேப்டன் மில்லர்' பட ரிலீஸ்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு: அப்படிப்போடு..!

Dsa
0


அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'கேப்டன் மில்லர்' படம் பொங்கலை முன்னிட்டு வரும் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது. இதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் 'கேப்டன் மில்லர்' ரிலீஸ் குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.



பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த பொங்கலுக்கு தனுஷ் நடிப்பில் 'கேப்டன் மில்லர்' படம் வெளியாக இருக்கிறது. இதற்காக ரசிகர்கள் வெறித்தனமாக தயாராகி வருகின்றனர். நாளுக்கு நாள் இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் 'கேப்டன் மில்லர்' ரிலீசில் நீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.



தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான வாத்தியை தொடர்ந்து தற்போது தனுஷ் நடிப்பில் 'கேப்டன் மில்லர்' படம் வெளியாக இருக்கிறது. பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தினை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். தனது அண்ணன் செல்வராகவை வைத்து 'சாணிக்காயிதம்' படத்தை இயக்கிய அருணுடன் தற்போது தனுஷ் கூட்டணி அமைத்துள்ளார்.


அருண் மாதேஸ்வரனின் ராக்கி, சாணிக்காயிதம் படங்கள் இரத்தம் தெறிக்க ராவாக வெளியாகி இருந்தது. மேக்கிங்கால் இப்படம் கவனம் பெற்றாலும் வணிக ரீதியாக வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் 'கேப்டன் மில்லர்' படம் அருண் மாதேஸ்வரனுக்கு கோலிவுட்டில் நல்ல பெயரை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் வரும் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள 'கேப்டன் மில்லர்' படத்தினை சட்ட விரோதமாக இணையத்தளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'கேப்டன் மில்லர்' படத்தினை 1166 இணையத்தளங்களில் சட்ட விரோதமாக வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.


'கேப்டன் மில்லர்' படத்துடன் சிவகார்த்திகேயனின் 'அயலான்' படமும் மோதவுள்ளது. 'இன்று நேற்று நாளை' பட இயக்குனர் ரவிக்குமாரின் இரண்டாவது படைப்பாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் இடையில் ஏராளமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் இந்த பொங்கலுக்கு விஜய் சேதுபதியின் 'மெர்ரி கிறிஸ்துமஸ்', அருண் விஜய்யின் 'மிஷின்' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top