அமெரிக்காவில் இந்திய மாணவர் ஒருவரை சுத்தியலால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியாவில் வசித்து வந்த இந்திய மாணவரான விவேக் சைனி (25 வயது) என்பவரே இவ்வாறு சுத்தியலால் அடித்து கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இந்திய மாணவர் ஸ்னாப்ஃபிங்கர் மற்றும் கிளீவ்லேண்ட் வீதியில் உள்ள செவ்ரான் ஃபுட் மார்ட்டில் உள்ள கடையில் பகுதி நேர ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் தங்கியிருந்த அறையில், மேலும் ஒரு சில நண்பர்களும் தங்கியிருந்துள்ளனர்.
அவர்களில் ஒருவரான ஜூலியன் பால்க்னர் (53வயது) என்பவர், இந்திய மாணவரிடம் போர்வை ஒன்று கேட்டுள்ளார். அதற்கு இந்திய மாணவர் தன்னிடம் போர்வை இல்லை என்று கூறியுள்ளார்.
இதன்பின்னர் தன்னிடம் இருந்த ஒரு ஆடையை அவரிடம் கொடுத்துள்ளார். இதற்குள் இந்திய மாணவரிடம் சண்டையிட்ட பால்க்னர், அவரை சுத்தியலால் தாக்கிக் கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதுகுறித்து தகவலறிந்த பொலிஸார் இந்திய மாணவரின் சடலத்தை கைப்பற்றி விசாரித்த நிலையில் அதில், இந்திய மாணவரின் முகம் மற்றும் தலையில் சுமார் 50 முறை சுத்தியலால் தாக்கியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.