ஸெய்ன்ஸித்தீக்
சம்மாந்துறைக் கல்வி வலையத்தில் காணப்படும் இறக்காமம் கல்விக் கோட்டத்திலுள்ள ஆரம்பப் பிரிவுப் பாடசாலையே றோயல் கனிஷ்ட கல்லூரியாகும். இக்கல்லூரியானது இக்கோட்டத்தில் ஆரம்பப் பிரிவுக்கென ஒரு முன்மாதிரிப் பாடசாலையாக மிளிர்ந்துகொண்டிருக்கிறது.
வருடா வருடம் நடைபெறும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா "மகத்துவம்" மாண்புறுவிழா எனும் பெயர் சூட்டப்பட்டு நடைபெற்று வரும் அதேவேளை இவ்வருடமும் மூன்றாவது முறையாக இந்த நிகழ்வு இடம்பெற இருக்கின்றது.
இக்கல்லூரியின் அதிபர் எம்.ஏ. எம். பஜீர் அவர்களின் தலைமையில் நாளை சனிக்கிழமை (2024.01.27) பி.ப.02.00 மணியளவில் கல்லூரியின் வளாகத்தில் மிக விமர்சையாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ. எல். எம். அதாஉல்லாஹ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்க உள்ள இந்நிகழ்வில் மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும் அரங்கேற உள்ளது.