ஏ. கே. ஹஷான் அஹமட்
சம்மாந்துறை நிருபர்
காரைதீவிலிருந்து மாவடிப்பள்ளி வழியாக அம்பாறை செல்லும் பாதையிலும், சம்மாந்துறையிலிருந்து மல்கம்பிட்டி வழியாக தீகவாபிக்கு செல்லும் பாதையும் வெள்ளத்தினால் மூழ்கி போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது.அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாகவும் சமுத்திரத்தின் நீர்மட்டம் 105 அடியை விட அதிகரித்தமையினாலுமே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்களின் அன்றாட நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் பயிர் நிலங்களுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது
இதனையடுத்து கரையோர மற்றும் தாழ்நிலப் பிரதேச மக்களை அவதானமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.