கடந்த சில தினங்களாக பெய்த அடை மழை மற்றும் வெள்ளத்திற்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய ஏறாவூர் நகர சபையின் சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
தொழில் நிமிர்த்தம் கட்டாரில் வசிக்கும் ஏறாவூரை சேர்ந்த சகோதரர் ஏ.எல்.அபுல்ஹசன் என்பவர் இந்த உலர் உணவுப் பொதிகளை வழங்கியுள்ளார்.
கடந்த சில தினங்களாக பெய்த அடை மழை காரணமாக ஏறாவூர் பிரதேசத்தின் பெரும் பகுதி நீரில் மூழ்கியது. இவ்வாறான சூழ்நிலையிலும் ஏறாவூர் நகர சபையின் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் பெரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர்.
குறித்த ஊழியர்களின் மகத்தான பணி தொடர்பில் கவனத்தில் கொண்ட சமூக சேவையாளர் ஏ.எல்.அபுல்ஹசன் அவர்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்குவதற்கு முன்வந்து கட்டாரில் இருந்தவாறு அதற்குரிய ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.
இதற்கமைவாக குறித்த ஊழியர்களுக்கு உலர் உணவுப் பொதி வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. கட்டார் நாட்டில் தொழில்புரியும் சமூக சேவையாளர் அபுல்ஹசன் நீண்டகாலமாக இவ்வாறான பணிகளை செய்து வருகின்றார். குறிப்பாக வருமானம் குறைந்த குடும்பங்கள் மற்றும் ஏழை மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காகவும் அவர் தனது சொந்த வருமானத்திலிருந்து ஒரு தொகையினை செலவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.