காஸா நெருக்கடி தொடர்பாக பெரிய அளவில் அமைதி மாநாடு கூட்டப்படும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.
காஸாவில் போர் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இது தொடர்பாக அதிக அதிகாரத்துடன் கூடிய பயனுள்ள சர்வதேச மாநாடு ஒன்று கூட்டப்படும் என்றும் சீன வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எகிப்தின் கெய்ரோவில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் சம்மி ஷுகாரியுடன் இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து கலந்துரையாடியதன் பின்னர் சீன வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இரு நாடுகளின் தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கான நிலையான காலக்கெடுவை இந்த மாநாடு தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.