சம்மாந்துறை நிருபர்
ஏ. கே. ஹஷான் அஹமட்
சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கல்லரிச்சல் 2 கிராம சேவையாளர் பிரிவில் பழைய மடுவத்திற்கு செல்லும் வீதியோரத்தில் இருந்த மரம் இன்று (03) முறிந்து விழுந்ததில் வீதிபோக்குவரத்து தடைப்பட்டத்துடன் அந்த பகுதியில் இருந்த மின்சார கம்பம் முறிந்து விழுந்து மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.
மின்சாரத்தை மீள வழங்கும் முயற்சியில் மின்சார ஊழியர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதோடு அப் பிரதேச மக்களும் மின்சார சபை ஊழியர்களுக்கு உதவிகளை வழங்குவதை அவதானிக்க முடிந்தது.