கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்வோருக்கு விசேட அறிவித்தல்

Dsa
0

 



இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கையடக்க தொலைபேசிகளை மாத்திரமே வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்வோருக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு வழங்கியுள்ள விசேட அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நுகர்வோர் மோசடியில் சிக்குவதைத் தடுக்க, சர்வதேச மொபைல் சாதன அடையாள IMEI எண்ணைச் சரிபார்க்கும்படி ஆணைக்குழு மக்களிடம் கோரியுள்ளது.


IMEI எண் என்பது "சர்வதேச மொபைல் சாதன அடையாள எண்" ஆகும்.இது அனைத்து கையடக்க தொலைபேசிகளுக்கும் ஒதுக்கப்பட்ட தனித்துவமான 15 இலக்க எண்ணாகும்.


IMEI என டைப் செய்து (இடைவெளி விட்டு) 15 இலக்கங்கள் கொண்ட IMEI எண்ணை 1909இற்கு அனுப்புவதன் மூலம் IMEI எண்ணின் செல்லுபடியை சரிபார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அப்போது குறித்த கையடக்க தொலைபேசி பதிவு செய்யப்பட்டதா இல்லையா என உடனடி பதில் செய்தி வரும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top