சிறுநீரக விற்பனை மோசடி தொடர்பில் தமக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையை நீக்குமாறு வைத்தியர்கள் குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல நிராகரித்துள்ளார்.
அந்த வைத்தியர்கள் சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் அதனை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்துடன் தொடர்புடைய 6 வைத்தியர்களும் வெளிநாடு செல்வதற்கு தகுதியுடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்த நிலையில், அவர்கள் வெளிநாடு செல்வதைத் தடைசெய்து உத்தரவு பிறப்பிக்குமாறு கொழும்பு குற்றவியல் பிரிவு நீதிமன்றம் விடுத்த கோரிக்கைக்கு அமைய அந்த வைத்தியர்களின் பயணத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ப்ளூமண்டல் பகுதியில் வசிக்கும் ஆண் மற்றும் பெண் ஒருவரின் ஊடாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு வறியவர்கள் குழுவொன்றின் சிறுநீரகங்கள் அந்த வைத்தியசாலையினால் அகற்றப்பட்டு இந்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பணக்காரர்களுக்கு 120 முதல் 150 இலட்சம் ரூபாய் வரையிலான தொகைக்கு சிறுநீரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதுடன், இதன்படி மேல்மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் விசாரணைக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் இந்த விசாரணையை ஒப்படைத்திருந்தார்