S.M.Z.சித்தீக்
அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது அத்துடன் மரக்கறி வகைகளுக்கும் அதிகமான விலையேற்றமாகவுள்ளது. இதனால் நடுத்தர பொருளாதார நிலைமையில் உள்ள மக்கள் அன்றாடம் சமைத்து உண்பதற்கு கூட வழி இழந்துள்ளமை பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சேனாநாயக்கா சமுத்திரத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடர் மழை பெய்து வருவதனாலும் விவசாய நிலங்கள் முழுமையாப் பாதிக்கப்பட்டுள்ளது. நீர் பெருக்கு அதிகரித்ததினால் வயல் நிலங்கள் குளமாய் மாறி யுள்ளமை விவசாயிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வயல் நிலங்களில் காணப்படும் வேளாண்மைகள் தற்காலத்தில் நெல்மணிகள் உருவாகும் காலமாக உள்ளதனால் தற்போது மழை நீர் தேங்கி நின்று குளம் போல் காட்சி அளிப்பதனால் நெல்மணிகள் உருவாகுவதற்கான சாத்தியங்கள் கனவிலும் இல்லை என்பதுதான் விவசாயிகளின் ஆதங்கமாக உள்ளது. இதனால் பல்லாயிரம் ஏக்கர் வயல் நிலங்களிலிருந்து பெறும் வருமானம் மக்கள் மத்தியில் வெறும் பூஜ்ஜியக் கனவாக மாறியுள்ளது.