ஒருநாள் கிரிக்கெட்டின் 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதுக்காக இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த ஒரு நாள் அணி, சிறந்த இருபதுக்கு இருபது அணி, சிறந்த வீரர் மற்றும் சிறந்த வீராங்கனை போன்ற விருதுகள் ஐசிசியால் வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2023ஆம் ஆண்டிற்கான, சிறந்த ஒருநாள் வீரர் விருதுக்கு 3 இந்திய வீரர்கள் உள்ளடங்கலாக 4 வீரர்களின் பெயரை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.
இந்நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் வீரர் விருதுக்கு விராட் கோலி தேர்வாகியுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.