வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்

Dsa
0

 



வங்கிக் கடனட்டைகளில் நடைபெறும் மோசடிகள் தொடர்பில் நாளுக்கு நாள் பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.


பொது மக்களின் உளவியல் ஆசைகள் மற்றும் தற்போதைய பொருளாதார நிலைமையினைக் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தும் மோசடியாளர்கள் மிக நூதனமாக வங்கிக் கடனட்டைகளிலிருந்து பணத்தை திருடும் செயல்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.


இதுபோன்ற மோசடிகளிலிருந்து தப்பித்துக் கொள்வது எப்படி? புத்திசாலித்தனமாக மோசடியாளர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்வது குறித்து அறிந்திருப்பது கட்டாயமாகும். வங்கி வாடிக்கையாளர்கள் அத்தனை பேரும் இது தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை,


பாதுகாப்பு கருதி எந்தவொரு தனிநபரும் உங்களது தனிப்பட்ட தகவல்களை இணையவழி ஊடாக பகிர்ந்துகொள்ள வேண்டாம்.


குறிப்பாக சமீப காலமாக இணையவழி பண மோசடிகள் அதிகரித்துவரும் நிலையில் இதுகுறித்து மிகுந்த விழிப்புணர்வுடன் இருத்தல் முக்கியமாகும்.


மோசடி செய்யும் நபர் உங்கள் தகவலைப் பெறுவதற்கு யாரேனும் ஒரு சட்டரீதியான நபர் அல்லது அமைப்பாகக் காட்டி, தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ பெயர்கள், கடவுச்சொற்கள், வங்கி கடனட்டை எண்கள் அல்லது வங்கித் தகவல்கள் போன்றவற்றை சேகரித்து அதன்மூலம் உங்கள் வங்கிக் கணக்குகளில் மோசடியான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளல் அல்லது உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணத்தை அபகரிக்க முடியும்.



இதேவேளை போலி இணையத்தளங்களில் பரிசில்கள் அல்லது சலுகைகள் பெற்று தருவதாக தெரிவித்து பயனர்களின் பெயர்கள், கடவுச்சொற்கள், கடனட்டை எண்கள் அல்லது வங்கித் தகவல் போன்ற இரகசியத் தகவல் கோரப்படும்.


அவ்வாறான நம்பத்தகாத இணையத்தளங்களில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலம் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்படும் அபாயம் ஏற்படுகிறது.


இது போன்ற சந்தேகத்திற்குரிய மோசடி முயற்சிகளில் உங்கள் தனிப்பட்ட வங்கி தகவல்களை நீங்கள் பகிர்ந்திருந்தால் உடனடியாக குறித்த வங்கியுடன் தொடர்பு கொண்டு இந்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்துங்கள்.


உங்கள் நிதித் தகவலின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு அனைத்து வங்கி வாடிக்கையாளர்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top