கல்முனை பிரதேச மட்ட அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம்



(சர்ஜுன் லாபீர்)


தற்போதைய சூழ் நிலையில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி தேவைகள் தொடர்பாக கல்முனை பிரதேச மட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு மற்றும் வெள்ள அனர்த்த அவசரகால ஆயத்தக் கூட்டம் இன்று(12) கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.



இவ் உயர்மட்டக் கூட்டத்தில் வெள்ள அனர்த்தம் கூடுதலாக ஏற்படுமாக இருந்தால் அதற்குரிய உடனடி நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்வது பற்றியும்,நிவாரண ஏற்பாடுகள் பற்றியும்,தற்காலிக இடைத்தங்கள் முகாம்கள் அமைப்பது தொடர்பாகவும் இன்னும் பல முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.


இக் கூட்டத்திற்கு கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்

எப் ரகுமான்,டாக்டர் ஏ.எல்.எம் பாரூக்,உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம் சாலீஹ்.கிராம நிர்வாக உத்தியோகத்தர் எம்.எச் ஜனூபா,நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள்,மாநகர சபை அதிகாரிகள், கடற்படை அதிகாரி,சுகாதார துறை அதிகாரிகள்,கல்வித்துறை அதிகாரிகள்,கல்முனை,மருதமுனை,நற்பிட்டிமுனை பிரதேச பள்ளிவாசல்களின் தலைவர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கிராம சேவகர்கள் என பல்வேறுபட்ட திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.





Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section