றமீஸ் அபூபக்கர்
இறக்காமம் கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட வெள்ளத்தினால் பாதிப்படைந்த நெல் வயல்களை பார்வையிட இறக்காமம் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் சுலித் விஜேவிக்ரம மற்றும். இறக்காமம் நிலையப்பொறுப்பு விவசாயப் போதனாசிரியர் S.A.M. அஸ்ஹர் ஆகியோர் வரிப்பத்தான்சேனை பெருவெளிக் கண்டத்தில் வெள்ளத்தினால் அமிழ்ந்து போயிருக்கும் நெல் வயல்களை பார்வையிட்ட வேளையில் அப்பிரதேச விவசாயிகள் வெள்ள அழிவு நிவாரணம் சம்பந்தமாக வருகை தந்திருந்த அதிகாரிகளிடம் வினவிய போது,
இம்முறை நெற்செய்கையில் ஈ.டுபட்டு வெள்ளத்தினால் பாதிப்படைந்த விவசாயிகள் அனைவரும் இறக்காமம் கமநல சேவை நிலையத்தில் முறைபாட்டினை சமர்பித்து பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் எதிர்வரும் நாட்களில் பதிவு செய்த விவசாயிகளின் நெல் வயல்களை மதிப்பீட்டுக் குழுவினரால் மதிப்பீடு செய்து. அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது எனவும் கூறினார்கள்.