மதுபானங்கள் மீதான கலால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவித்தலை நிதி அமைச்சு வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ளது.
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, அதி விசேஷம் சாராயம் மீதான கலால் வரி லீட்டருக்கு 840 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பனை, தேங்காய் மற்றும் பதப்படுத்தப்பட்ட சாராயம் மீதான கலால் வரி 900 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.