அயலக தமிழர் விழாவில் சிறப்புரை ஆற்ற கிழக்கு ஆளுநருக்கு அழைப்பு

Dsa
0

 



தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை மூன்றாம் ஆண்டாக 'தமிழ் வெல்லும்' என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு மாபெரும் அயலகத் தமிழர் தின விழா சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்தியாவின் தமிழக அரசினால் நடத்தப்படும் “அயலகத் தமிழர் தினம் 2024” விழாவில் தமிழக அரசினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் தமிழ்நாட்டை சென்றடைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியா சென்றுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு தமிழ்நாடு அரசின், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தானால் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்றும் (11.01.2024) நாளையும் (12.01.2024), நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில், இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், டுபாய், இலண்டன், கனடா, மொரிசியஸ், அவுஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தியா சென்றடைந்த கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரை, தமிழக அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் நேரடியாகச் சென்று வரவேறுள்ளார்.

இந்நிலையில், “அயலகத் தமிழர் தினம் 2024” விழாவில், கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் சிறப்புரையாற்ற உள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று (ஜனவரி 11) மற்றும் நாளை என இரு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் இலங்கை, மலேசியா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளிலிருந்து தமிழ் வம்சாவழியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

அயல்நாடுகளில் வாழும் 1400ற்கும் மேற்பட்டோர் இம்மாநாட்டில் பங்கேற்பதற்குப் பதிவுகள் செய்துள்ளனர்.

இதில், 218 சர்வதேசத் தமிழ்ச் சங்கங்கள் 48 பிற மாநிலத் தமிழ்ச் சங்கங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த அயலகத் தமிழர்கள் இந்த இரண்டு நாள் நிகழ்விலும் பங்கேற்கிறார்கள்.

இந்த விழாவின் முதல் நாளான இன்று தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவைத் ஆரம்பித்து வைத்துச் சிறப்புரை ஆற்றவுள்ளார்.

இரண்டாம் நாளான நாளை 12.01.2024 அன்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் விழாப்பேருரை நிகழ்த்துவதுடன் ‘எனது கிராமம்’ என்னும் முன்னோடித் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.

இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தாங்கள் பிறந்த கிராமத்தை மேம்படுத்த விரும்பும் அயலகத் தமிழர்கள் அதற்குரிய நிதியை அளித்து இத்திட்டத்தின் வாயிலாகச் செயல்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கா. சண்முகம் தலைமை விருந்தினராகப் பங்கேற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் விழாவின் முக்கிய நிகழ்வாக 'வேர்களைத் தேடி' திட்டத்தின் கீழ் அவுஸ்திரேலியா, கனடா, ஃபிஜி, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 57 அயலகத் தமிழ் மாணவர்கள் தாங்கள் பண்பாட்டுச் சுற்றுலா சென்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top