கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் சுமார் 09 மாதங்கள் பொது சுகாதாரம் மற்றும் தர முகாமைத்துவ பிரிவுகளின் பொறுப்பு வைத்திய அதிகாரியாக கடமையாற்றி பிராந்திய சுகாதாரத் துறைக்கு அளப்பெரிய சேவையாற்றியமைக்காக சாய்ந்தமருதைச் சேர்ந்த டாக்டர் எம்.ஏ.எம்.ஹில்மி கல்முனை
பிராந்திய சுகாதார சேவைகள் பணி மனையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்களால் பாராட்டிக் கௌரவிக் கப்பட்டார்.
பொது சுகாதார மற்றும் தர முகா மைத்துவ பிரிவுகளின் பொறுப்பு வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய டாக்டர் எம்.ஏ.எம்.ஹில்மி சமூக வைத்திய நிபுணர் பட்டமேற்படிப்புக்காகச் செல்வதை முன்னிட்டு இந்த நிகழ்வு
ஏற்பாடு செய்யப்பட்டது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகிலா இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிராந் திய பிரிவுத் தலைவர்கள், பிராந்திய பணிமனையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.