வற் வரி அதிகரிப்பால், பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன.
அதற்கமைய, உருளைக்கிழங்கு, பருப்பு, சீனி, வெங்காயம், கோதுமை மா மற்றும் சில அரிசி வகைகளின் விலைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
வற் வரி உயர்வுக்கு முன்னர் 300 ரூபாவாக இருந்த ஒரு கிலோ பருப்பின் விலை தற்போது 350 ரூபாவாக அதிகரித்துள்ளது.
மேலும் சில பகுதிகளில் 290 ரூபாவாக இருந்த ஒரு கிலோ சீனியின் விலை 320 ரூபாவாகவும் அதிகரித்துள்ளவது.
வற் வரி என்ற போர்வையில் சில வர்த்தகர்கள் கட்டுப்பாடற்ற வகையில் பொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளதாக நுகர்வோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.