S.M.Z.சித்தீக்
பிறந்திருக்கும் 2024 புது வருடத்தை முன்னிட்டு நாடு பூராகவும் அரச நிறுவனங்களில் தத்தமது சேவைகளை புதிய வருடத்தில் ஒரு புத்துணர்ச்சியுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் ஆரம்பிப்பதற்கா ஓர் அத்திவாரமாக இன்று அமைவதற்காக அரசு நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சத்திய பிரமாண வாக்குறுதிகளை ஒவ்வொரு உத்தியோகத்தர்களும் வாயால் மொழிந்து மனதில் ஏற்று வருங்காலத்தில் சிறப்பாகச் செயற்படுவதற்கான நாளாக இன்றைய நாளை ஆரம்பித்து வைக்கின்றார்கள்.
நாடு பூராகவும் நடைபெறும் இந்த நிகழ்வின் அடிப்படையில் இறக்காமம் சிவில் பாதுகாப்புப் படை செயற்றிட்டக் காரியாலயத்தில் இன்று காலை நடைபெற்றது. காரியாலயத்தின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட சிவில் பாதுகாப்புப் படை தலைவர் ஜே.றஹீம் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.