மரெல்லா டிஷ்கவரி 2 (Marella Discovery 2) என்ற சொகுசு ரக பயணிகள் கப்பல் இன்று நாட்டை வந்தடைந்துள்ளது
குறித்த கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,274 பயணிகள் மற்றும் 718 பணியாளர்களுடன் அந்த கப்பல் இந்தியாவிலிருந்து வருகைத்தந்துள்ளது.
குறித்த கப்பலில் வருகைத் தந்தவர்களில் அதிகமானோர் ஜேர்மனியர்கள் மற்றும் இத்தாலியர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.