( ஏறாவூர் சாதிக் அகமட்)
ஏறாவூர், தாமரைக்கேணியை சேர்ந்த புத்தி சுயாதீனமற்ற அமீர்தீன் யாசிர் அறபாத் (16) என்ற சிறுவனே விபத்தில் பலியானார்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதானவீதியில் நேற்று (16/12) இச் சம்பம் இடம்பெற்றுள்ளது.
தாய், யாசகம் பெறுவதற்காக கல்முனை சென்று ஊர் வரும்போது, தாயை எதிர்பார்த்து பஸ்தரிப்பிடத்தில் இருந்த இச்சிறுவன் ,தாயை கண்டதும் வீதியை கடந்து தாயிடம் ஓடிச் செல்லும் போது பிரதான வீதியால் பயணித்த தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு சொந்தமான பஸ் ஒன்றுடன் மோதுண்டதால் சம்பவ இடத்திலேயே சிறுவன் மரணித்துள்ளார்.
பஸ்ஸின் சாரதி ஏறாவூர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு, சிறுவனின் சடலம் 1990 விசேட அம்பியுலன்ஸ் மூலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற மரண விசாரணை அதிகாரி எம்.எஸ். எம்.. நஸீர் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்காக பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தமை குறிப்பிடத்தக்கது.
பிரேத பரிசோதனை முடிவடைந்ததும் பிரேதம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.