யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி வருகின்ற வேளை காணி விடுவிப்புக்கள் தொடர்பில் பச்சைக்கொடி காட்டப்படும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார்.
யாழில் இன்றைய தினம் (26.12.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், வனவள பாதுகாப்பு, வன ஜீவராசி திணைக்களம் என்வற்றின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள காணிகளின் விடுவிப்பு தொடர்பில் காணப்படும் 11 கட்டங்களில் 4 கட்டங்களே பூர்த்தியாகியுள்ளன.