ஸ்மார்ட் தொழிநுட்பத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட மிளகாய் செய்கையினூடாக கூடுதல் அறுவடையை பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. பயிரச்செய்கை மேற்கொள்ளப்படும் நிலத்தில் புதிய தொழிநுட்ப ஆலோசனைகளுக்கமைய மிளகாய் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டின் மிளகாய் தேவையில் பெருமளவு மிளகாய் வருடாந்தம் இறக்குமதி செய்யப்படும் நிலையில், அதனை கட்டுப்படுத்தி வருமானம் ஈட்டும் வகையில் மகாவலி னு வலயத்தில் மிளகாய் செய்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் மகாவலி அதிகார சபையின் பங்களிப்புடன் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. அதனடிப்படையில் தியசென்புர பிசோ உயன பகுதியில் விவசாயி ஒருவரின் 40 பேர்ச் காணியில் ஸ்மார்ட் தொழிநுட்பத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட மிளகாய் செய்கையினூடாக அதிஉச்ச அறுவடை பெறப்பட்டுள்ளது.
குறித்த காணியிலிருந்து ஒரு தடவையில் சுமார் ஆயிரம் கிலோ வரை மிளகாய் அறுவடையை பெறக்கூடிய சூழல் காணப்படுகிறது. சந்தையில் காணப்படும் பச்சை மிளகாய் விலைக்கமைய கூடுதல் வருமானத்தை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. பழைய விவசாய முறைகளை பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபடுவதற்கு பதிலாக நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி குறித்த முன்னெடுக்கப்பட்ட மிளகாய் செய்கை வெற்றியளித்துள்ளதாக விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.