சீனிஸ்கான்
காக்காமுனை அல்-மதீனா முன்பள்ளி பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு பாடசாலை கேட்போர் கூடத்தில் இன்று (30) நடைபெற்றது.
காக்காமுனை அல்-மதீனா முன்பள்ளி பாலர் பாடசாலை ஆசிரியையின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்
இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நிகார், உதவிக்கல்வி பணிப்பாளர் சமீம், முன்பள்ளி கள உத்தியோகத்தர் நவாஸ்தீன் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்று மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். பிரதம அதிதியால் பாடசாலைக்கு சில உதவிகள் வழங்கப்பட்டது.