S.M.Z.சித்தீக், றமீஸ் அபூபக்கர்
இறக்காமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிபுகுண பன்சலைக்கு அருகாமையில் செல்லும் ஏலகம்புர வீதிக்கு அருகாமையில் காணப்படும் மலைச்சாரலோடு சேர்ந்து அறை ஒன்றிற்குள் மரணித்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறக்காமம் பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த அறையிலுள் கடந்த காலத்தில் ஒரு பௌத்த பிக்கு வசித்து வந்ததாகவும் பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளார்கள்.
குறித்த மரணித்த நிலையில் காணப்படுபவர் சுமார் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்னர் மரணித்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிசார் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.