S.M.Z.சித்தீக்
றமீஸ் அபூபக்கர்
இறக்காமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வரிப்பத்தான்சேனை மஜீத் புரம் பகுதியில் நேற்று கைகுண்டு ஒன்றுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இறக்காமம் ஐந்தில் வசித்து வரும் இளைஞர் ஆவார்.
பொலிசாருக்குக் கிடைத்த தகவலை அடுத்து நேற்று இரவு சுற்றி வளைப்பை மேற்கொண்ட பொலிசார் குறித்த இளைஞனைக் கைது செய்துள்ளார்கள்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிசார் மேற்கொண்டு வருவதோடு, இவரை அம்பாறை உயர் நீதிமன்றத்திற்கு ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றார்கள்.