பிரபல தமிழ் நடிகைகளான நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல நடிகைகளின் டீப் ஃபேக் போலி ஆபாச வீடியோக்கள் வைரலாகி வருவது திரையுலகத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் நடிகைகள், விளையாட்டு வீராங்கனைகள், பெண் சாதனையாளர்கள், பெண் அரசியல் தலைவர்கள் என பலரின் முகத்தை ஆபாச படங்களில் வரும் பெண்களின் நிர்வாண அல்லது ஆபாச வீடியோவுடன் டீப் ஃபேக் எனப்பும் தொழில்நுட்பத்தின் மூலமால மார்பிங் செய்து உண்மையான வீடியோபோல பகிர்ந்து வருவது பெருகி வருகிறது.
பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஷ்மிகாவின் முகத்தை பிரிட்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்ணான ஜாரா படேலின் வீடியோவுடன் மார்பிங் செய்து டீப் ஃபேக் வீடியோ வெளியிடப்பட்டது தெரிய வந்தது.
இதற்கு நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் பலர் கண்டனம் தெரிவித்தனர். மத்திய தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும் இது தொடர்பாக சமூக வலைதளங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், தமிழின் பிரபல நடிகைகளான நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டோரின் டீப் ஃபேக் ஆபாச வீடியோக்கள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் ஸ்டோரியில் கீர்த்தி சுரேஷ் டீப் ஃபேக் போலி வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த போலி வீடியோக்கள் திரையுலகத்தினர் மத்தியில் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.