தென்கொரிய பிரபல நடிகர் காரில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு வெளியாகி 2020 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது பெற்ற பாராசைட் என்கிற தென்கொரிய படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் லீ சன் கியூன்.
இவர் போதைப் பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகர் லீ சன் கியூன் அவரது காரில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனால் இவரது மரணம் தற்கொலையா அல்லது கொலையா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.