யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மானிப்பாய், ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள மதுபான விற்பனை நிலையத்திலேயே நேற்று(26) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைது நடவடிக்கை
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயல்படும் யாழ். பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மாறுவேடத்தில் சென்ற பொலிஸாருக்கு மதுபானத்தை விற்பனை செய்த போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்ட 36 வயதான சந்தேக நபர் மேலதிக நடவடிக்கைக்காக மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.