சூரைக் காட்டால் சுற்றி வளைக்கப்படும் வீதி

Dsa
0

 


S.M.Z.சித்தீக் 


இறக்காமம் ஆயுர்வேத வைத்தியசாலை வீதியின் இரு மருங்கிலும் சூரை மற்றும் கிளா போன்ற அடர்ந்த காடுகளில் காணப்படக்கூடிய முள்ளின மரங்கள்  வளர்ந்து வீதியால் பயணிப்பது பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. 



குறித்த வீதியானது மதினா பாடசாலைக்கு மாணவர்கள் செல்லும் வீதியாகவும், ஆயுர்வேத வைத்தியசாலை, காதி நீதிமன்றம், கோட்டக் கல்வி அலுவலகம், கைத்தறி நெசவு நிலையம், சிவில் பாதுகாப்புப் படைக் காரியாலயம் போன்ற முக்கிய அரச நிறுவனங்களுக்கு பொதுமக்களும் மாணவர்களும், அரச ஊழியர்களும் செல்லும் பிரதான வீதியாகக் காணப்படுவதனால் இவ்வீதியில் பயணிக்கும் அத்தனை பேரும் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளார்கள்.



குறித்த வீதியானது இறக்காமம் பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியாகக் காணப்படுகின்றது. இருப்பினும் இது  கவனிப்பாரற்றுக் காடேறிக் காட்சியளிக்கிறது. சபை இது தொடர்பாக கவனயீனமாக இருப்பது ஏன்? கண்ணிருந்தும் கபோதியாய் செயற்படுவதால் இவ் வீதியால் பயணிப்போரின் கண்களில் இவ்வகையான முட்கள் தைத்தால் இக் கண்ணில் ஏற்படும் இழப்பிற்கு யார் பொறுப்புக்கூறுவது?  இறக்காமம் பிரதேச சபைக்கு சிறந்த காரியாலய நடவடிக்கைகளுக்காக உலக வங்கியால் வழங்கப்பட்ட  விருதை அகௌரவப்படுத்தும் செயற்பாடாகவே இப் பராமுகம் சுட்டுகிறது.





Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top