(உமர் அறபாத் -ஏறாவூர் )
ஏறாவூர் பிரதான வீதியில் உள்ள பஸ் தரிப்பு நிலையங்கள் ஏறாவூர் சுப்ரீம் லயன்ஸ் கழகத்தினால் இன்று புனரமைப்புச் செய்யப்படுகின்றது.
ஏறாவூர் பிரதான வீதியில் அமைந்துள்ள கோப் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் உள்ள பஸ் தரிப்பு நிலையமும் ஏறாவூர் நகரசபைக்கு அருகாமையில் காணப்படும் இரண்டு பஸ்தரிப்பு நிலையங்களுமே லயன்ஸ் கழகத்தினால் புனரமைப்பு செய்யப்படுகிறது.
சேதமடைந்து காணப்படும் இவ் இரண்டு பஸ் தரிப்பிடங்களிலும் மழை காலங்கள் மற்றும் அதிக வெயில் விழும் காலப்பகுதியில் எல்லாம் பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் நிற்க முடியாத நிலைப்பாட்டில் இருந்தவேளை இவ்விடயம் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்தும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
பொதுமக்களுக்கு மிகவும் அவசியமான தேவைகளில் ஒன்றாக கருதப்படும் இவ் பஸ் தரிப்பு நிலையத்தை துரிதகதியில் புனரமைப்பு செய்ய ஏறாவூர் சுப்ரீம் லயன்ஸ் கழகத்தின் நிருவாகிகளில் ஒருவரான ரெபுபாசம் முஹம்மட் றிஸ்வான் அவர்களின் நிதிப்பங்களிப்பு மூலம் இம்மனிதநேய வேலைத்திட்டம் ஏறாவூர் சுப்ரீம் லயன்ஸ் கழகத்தினால் முன்னெடுக்கப்படுகிறது.
ஏறாவூரில் தொடர்ச்சியான சமூகநலன் பணிகளை மேற்கொள்ளும் ஏறாவூர் சுப்ரீம் லயன்ஸ் கழகத்தினருக்கு பொதுமக்கள் தங்களது நன்றிகளை தெரிவிப்பதோடு இன்னும் பல பணிகளை தொடர பிராத்தனைகளையும் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது .