ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் உள்ள இலங்கையர்களுக்கு

Dsa
0

 



ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பல்வேறு சிறைகளில் உள்ள 44 இலங்கையர்களுக்கு அரச ஆணை மூலம் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.


ஐக்கிய அரபு அமீரகத்தின் 52 ஆவது தேசிய தினமான டிசம்பர் 02 ஆம் திகதியன்று அரச ஆணை மூலம் இந்த இலங்கையர்கள் மன்னிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிவிவகார அமைச்சு, அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு இதனை அறிவித்துள்ளது.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்றிருந்த நிலையில், இலங்கைக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளின் பின்னணியிலும் இலங்கை கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.


அரச மன்னிப்பைப் பெற்ற இந்த 44 இலங்கையர்களும் உரிய காலத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தினால் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் கூறப்படுகின்றது.



அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதுவர் இலங்கையர்களுக்கு மன்னிப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ததற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கும், அதன் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சுக்களுக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top