குருநாகல், மாவத்தகம பிரதேசத்தில் தனிப்பட்ட தகராறு காரணமாக இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இது தொடர்பான மோதல் சம்பவம் நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளதாக எமது விசாரணையின் போது பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அப்பகுதியின் பாதுகாப்புக்காக பொலிசார் மற்றும் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.