நூருல் ஹுதா உமர்
சுனாமி பேரலையில் நூற்றுக்கணக்கானவர்களை இழந்த அம்பாறை மாவட்ட மாளிகைக்காடு பிரதேசத்தில் சுனாமிப் பேரலை நினைவு தின துஆ பிராத்தனையும், குர்ஆன் தமாம் செய்தலும், நினைவுரையும் மாளிகைக்காடு அந்-நூர் ஜும்மா பள்ளிவாசலின் ஏற்பாட்டில் ஜும்மா பள்ளிசாலில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (26) மாலை இடம்பெறவுள்ளது டன் மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி சங்க ஏற்பாட்டில் ஜனாஸா சங்க வளாகத்தில் அன்று காலை சுனாமி நினைவு தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.
அஸர் தொழுகையை தொடர்ந்து ஆரம்பமாகும் ஜும்மா பள்ளிவாசலின் இந்நிகழ்வு மஹரீப் தொழுகை வரை இடம்பெறவுள்ளதுடன் மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி சங்க ஏற்பாட்டில் ஜனாஸா சங்க வளாகத்தில் அன்று காலை இடம்பெறவுள்ள நிகழ்விலும் சாய்ந்தமருது- மாளிகைக்காடு உலமாக்கள், பிரதேச செயலாளர்கள், நிர்வாக சேவை அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், கல்விமான்கள், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், வர்த்தக பிரமுகர்கள், பொது அமைப்புக்களின் பிரதானிகள், ஊர்மக்கள் எனப்பலரும் கலந்துகொள்ளவுள்ளதுடன் சுனாமிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளுக்காக குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட உள்ளதுடன், துஆ பிராத்தனையும் சுனாமி தொடர்பிலான நினைவுரையும் இடம்பெறவுள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டு உலகை உலுக்கிய சுனாமிப்பேரலையில் மாளிகைக்காடு கடற்கரையை அண்டியதாக அமைந்திருந்த கமு/கமு/ அல்- ஹுசைன் வித்தியாலயம் மற்றும் மதரஸத்துல் இர்ஸாதியாவில் கல்விகற்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் மரணித்ததுடன் குறித்த கல்வி நிலையங்களும் முழுமையாக பாதிக்கப்பட்டது மற்றுமின்றி பல நூற்றுக்கணக்கானோர் மரணித்ததுடன் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.